காப்புப் பருவம்
பாட்டுடைத் தலைவனை அல்லது தலைவியைக் காத்தருளுமாறு இறைவனை வேண்டிப்பாடுவது. இது குழந்தையின் மூன்றாம் மாதத்திற்குரியது.
தாலப் பருவம்
தால் - நாக்கு, குழந்தையின் ஐந்தாம் மாதத்திற்குரியது. குழந்தையை நாவசைத்து ஒலி எழுப்புமாறு வேண்டுதல்.
செங்கீரைப் பருவம்
ஒரு காலை மடித்து ஒரு காலை நீட்டி இரு கைகளையும் ஊன்றிக் கீரை அசைவது போலக் குழந்தையை, செங்கீரை ஆடுமாறு வேண்டுவது. இது குழந்தையின் 7ஆம் மாத்திற்குரியது.
சப்பாணி
குழந்தையின் 9ஆம் மாதத்திற்குரியது. இது குழந்தையை இரு கைகளையும் கொட்டுமாறு வேண்டுதல்.
முத்தம்
இப்பருவம் 11ஆம் மாதத்திற்குரியது. குழந்தையை முத்தம் கொடுக்கும்படியாகத் தாயும் பிறரும் வேண்டுவது.
வருகை அல்லது வாரானை
குழந்தையின் 13ஆம் மாதத்தில் குழந்தையைத் தளர்நடையிட்டு வருக என அழைப்பது.
அம்புலி
15ஆம் மாதத்திற்குரிய இப்பருவத்தில் நிலவைப் பாட்டுடைத் தலைவனுடன் விளையாட வரும்படி அழைப்பது. இப்பருவத்தைச் சாம, பேத, தான, தண்டம் என்னும் நான்கு வழிகளில் அமைத்துப் பாடுவர். இப்பருவம் பாடுவதற்குக் கடினமான பருவம் என்பர்.
சிற்றில்
17ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண் குழந்தைகள் கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும். (சிற்றில் = சிறு வீடு)
சிறுபறை
19ஆம் மாதத்திற்குரிய இப்பருவம் குழந்தை சிறுபறை முழக்கி விளையாடுதலைக் குறிக்கும்.
சிறுதேர்
21ஆம் மாதத்திற்குரிய இதில் குழந்தை சிறுதேர் உருட்டி விளையாடுதல் குறிப்பிடப்படும்.
நீராடல்
குழந்தையை நீரில் குளிக்கும்படி வேண்டுதல்.
அம்மானை - கழங்கு
கழங்கினை மேலை வீசி ஆடும்படி வேண்டுதல்.
ஊசல்
ஊஞ்சலில் ஆடும்படி குழந்தையை வேண்டுதல்.
No comments:
Post a Comment