தமிழகத்தை இதுவரை தாக்கிய 29 புயல்கள்
சென்னை: வங்கக் கடலில் உருவான 29 புயல்களில் தானே, நிஷா, வர்தா புயல்கள் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியவை. இதுவரை தமிழகத்தில் 29 புயல்கள் தாக்கியுள்ளன. அதில் கடந்த 1966ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி வங்கக் கடலில் தோன்றிய புயல் 100 கிமீ வேகத்தில் சென்னை அருகே கரையைக் கடந்தது. அதில் பெருத்த சேதம் ஏற்பட்டது. ராயபுரம் பனைமரத் தொட்டி குப்பத்தில் கடல் நீர் உள்ளே புகுந்தது. கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சென்ைன துறைமுகத்துக்கு வந்த 4 கப்பல்கள் புயலில் சிக்கி தரைதட்டி நின்றன. 2 கப்பல்கள் பாறைமீது மோதி நொறுங்கின. சென்னை துறைமுகத்தில் நின்றிருந்த லைபீரியாவை சேர்ந்த கப்பல் ஒன்று புயல் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அங்கும் இங்கும் தத்தளித்து ஒரு பாறைமீது மோதி இரண்டாக பிளந்து கடலில் மூழ்கியது. அந்த கப்பலின் கொடி மரம் மட்டும் கடல் மட்டத்துக்கு வெளியில் தெரிந்தது.
அந்த கப்பலில் பணியாற்றிய 47 பேரில் கேப்டன் உள்பட 14 பேர் கப்பல் உடைந்ததால் கடலில் குதித்து நீந்தி கரை சேர்ந்தனர். 8 பேர் கப்பலின் கொடி மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தனர். மறுநாள் காலையில் அவர்கள் மீட்கப்பட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வந்து கொண்டு இருந்த பயணிகள் ரயில் மதுராந்தகம் அருகே கவிந்தது. அதில் பலபேர் காயம் அடைந்தனர். 1977ம் ஆண்டு ஒரு பெரும் புயல் தமிழகத்தை தாக்கியது. திருச்சி தஞ்சையில் மட்டும் அதிக அளவில் சேதம் ஏற்பட்டது. சென்னை துறைமுகத்தில் நின்றிருந்த சீன கப்பல் ஒன்று கடலில் மூழ்கியது. அந்த கப்பலின் கேப்டன் இறந்தார். 1985ம் ஆண்டில் ஒரு புயல் தமிழகத்தை தாக்கியது. பின்னர் 1990 முதல் 2006ம் ஆண்டு வரை உருவான புயல்களில் 1998ல் உருவான புயல் அதிக அளவில் மழையை கொட்டித் தீர்த்து. அந்த ஆண்டு கணக்குப்படி சராசரியை விட 30 சதவீதம் கூடுதலாக மழை பெய்தது.
அதற்கு பிறகு, 2005ம் ஆண்டு பியார், பாஸ், பனூஸ் என மூன்று புயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. இதன் காரணமாக 2005ம் ஆண்டு மொத்தமாக 773 மிமீ மழை பெய்தது. சராசரியாக 432 மிமீ என கணக்கிடப்பட்டது. இது 79 சதவீதம் இயல்பைவிட கூடுதல். அதனால் 2005ம் ஆண்டு பெருஞ்சேதம் ஏற்பட்டது. தமிழகமே வெள்ளக்காடானது. பல கோடி மதிப்பு பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. 2008ம் ஆண்டு வந்த நிஷா புயல் வங்கக் கடலில் உருவானது. 22 ஆண்டுகளுக்கு பிறகு வங்கக் கடலில் உருவான பெரும் புயல் என்று இதை வர்ணித்தார்கள். நவம்பர் மாதம் தோன்றிய இந்த புயல் சுமார் 20 நாட்கள் தமிழகத்தில் மழையை கொட்டித் தீர்த்து காரைக்காலில் கரை கடந்தது. இதனால் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 177 பேர் இறந்தனர். 2782 கால்நடைகள் இறந்தன. 61 ஆயிரம் குடிசைகள் வெள்ளத்தில் மூழ்கின. 1.5 லட்சம் குடிசைகள் வீடுகள் சேதம் அடைந்தன. சுமார் 8.80 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 14 லட்சம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
20 லட்சம் ஏக்கர் பயிர் சேதம் அடைந்ததாக அரசு அறிவித்தது. 2011ம் ஆண்டு தானே புயல் வங்கக் கடலில் உருவாகி தமிழகத்தை தாக்கியது. அந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி உருவான இந்த புயல்தான் முதலாவது அதிதீவிரப் புயல் என்ற பட்டியலில் இடம் பிடித்தது. இது டிசம்பர் 30ம் தேதிதான் புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடையே கரையைக் கடந்தது. மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று வீசி கடலோரப் பகுதிகளை சி்ன்னாபின்னமாக்கியது. அப்போது சென்னையில் 2, புதுச்சேரியில் 7, கடலூரில் 39 பேர் உயிரிழந்தனர்.1000க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்படைந்தன.40 ஆயிரம் மின் கம்பங்கள் முறிந்து விழந்தன. தானே புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம் தான்.2015ம் ஆண்டு பருவமழையின் போது செபலா, மெஹ் என்று இரண்டு புயல்கள் அரபிக் கடல் பகுதியில் தோன்றினாலும் வங்கக் கடலில் பெரிய அளவில் புயல் ஏதும் உருவாகவில்லை.
ஆனால், எல்நினோ என்ற புவியியல் மாற்றம் காரணமாக வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி அதன் காரணமாக உருவான காற்றழுத்தம் ஆகியவை வங்கக் கடலில் உருவாகி நவம்பர் முதல் வாரத்தில் கனமழையை கொட்டித் தீர்த்தது. அதனால் கடலோர மாவட்டங்கள் எல்லாம் மழை வெள்ளத்தில் தத்தளித்தன. அதிலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. 2015 டிசம்பர் முதல் வாரத்திலும் மீண்டும் கனமழை கொட்டத் தொடங்கியது. ஏற்கெனவே பெய்த மழையால் வெள்ளம் சூழ்ந்த நிலையில், மீண்டும் மழை பெய்தது பெரும் சோதனையாக அமைந்தது. மக்கள் வெளியில் வர அச்சப்பட்டு வீட்டுக்குள் முடங்கினர். டிசம்பர் 2ம் தேதி இரவு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. வெள்ள நீருடன் அந்த நீரும் சேர்ந்து சென்னையை மூழ்கடித்தத