Thursday, 25 January 2018

சீவக சிந்தாமணி


சீவக சிந்தாமணி

ஐம்பெருங் காப்பியம்


சீவக சிந்தாமணி என்பது சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சோழர் காலத்தில் எழுதப்பட்டது. திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட இக் காப்பியம் சீவகன் என்பவனின் அக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. சமய இலக்கியங்களே அதிகம் படைக்கப்பட்ட அக்காலத்தில், மக்களிடத்திலும் , மன்னனிடமும் கூட இதற்கான தேவையும், ஆதரவும் இருந்ததாகத் தெரிகிறது.

சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் தமிழில் தோன்றிய முதல் இரு காப்பியங்களாகக் கருதப்படும், கதையை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவான கதை கூறும் தமிழ் இலக்கியம் இது. எனினும் முன்னையவற்றைப் போலன்றி, சீவக சிந்தாமணி விருத்தப்பாக்களால் ஆனது. இதனால் விருத்தப்பாக்களால் ஆன முதல் தமிழ்க் காப்பியமாகவும் இது திகழ்கின்றது

Friday, 19 January 2018

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலே தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது. இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.

தேவாரம் பாடல் பெற்ற
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்


பெயர்
புராண பெயர்(கள்): திருவாலவாய்[1], சிவராஜ தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம்
பெயர்: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்: மதுரை
மாவட்டம்: மதுரை
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: சுந்தரேஸ்வரர் (சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர்)
தாயார்: மீனாட்சி (அங்கயற்கண்ணி, தடாதகை பிராட்டி, பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறை யவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள்)
தல விருட்சம்: கடம்ப மரம்
தீர்த்தம்: பொற்றாமரைக்குளம், வைகை ஆறு, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி
ஆகமம்: காரண ஆகமம்
சிறப்பு திருவிழாக்கள்: சித்திரைத் திருவிழா
பாடல்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை: 27
வரலாறு
தொன்மை: 2000 முதல் 3000 வருடங்கள்

மதுரை - பெயர்க்காரணம்


மதுரை – பெயர்க்காரணம்

பாண்டிய நாட்டின் பழைமையான தலைநகரமாக விளங்கிய மதுரை, இன்றைய தமிழகத்தின் முதன்மை நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மதுரை என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. தமிழ் என்றால் மதுரை; மதுரை என்றால் தமிழ். இங்ஙனம், இவை இரண்டும் பிரிக்க இயலாதவை. அதனாலேயே மதுரையைப் போற்றப் புகுந்த புலவர் எல்லாரும் தமிழோடு சேர்த்தே போற்றிப் புகழ்ந்தனர். தமிழ்கெழு கூடல் எனப் புறநானூறு போற்றியது. நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர், தாம் பாடிய சிறுபாணாற்றுப்படையில்,’தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை’ என்று குறித்தார். இளங்கோவடிகள், தமது நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில், ‘ஓங்குசீர் மதுரை’, ‘மதுரை மூதூர் மாநகர்’, ‘தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை’, ‘மாண்புடை மரபின் மதுரை’, ‘வானவர் உறையும் மதுரை’, ‘பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்’ எனப் பற்பல அடைமொழிகளால் மதுரைக்கு புகழ்மாலை சூட்டி மகிழ்ந்தார். ‘சேரநாடு வேழமுடைத்து, சோழநாடு சோறுடைத்து, பாண்டியநாடு முத்துடைத்து, தொண்டைநாடு சான்றோர் உடைத்து’ என்பன தமிழகத்தின் சிறப்பை உணர்த்தும்.

மதுரைக்கு கூடல் எனவும், ஆலவாய் எனவும் வேறு பெயர்கள் வழங்குகின்றன. நான்மாடக்கூடல் என்னும் பெயரே கூடல் என மருவியுள்ளது. திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால், நான்மாடக்கூடல் என்னும் பெயர் வழங்கலாயிற்று என்பர். ‘கன்னிகோவில்’, ‘கரியமால் கோவில்’, ‘காளிகோவில்’, ‘ஆலவாய்க் கோவில்’ ஆகிய நான்கு திருக்கோவில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததால், நான்மாடக்கூடல் என்னும் பெயரமைந்தது என்பாரும் உளர்.

வருணன், மதுரையை அழிக்க ஏழு மேகங்களை அனுப்பினான். அதைப்பற்றி இறைவனிடம் பாண்டியன் முறையிட, இறைவன் நான்கு மேகங்களை மதுரையைக் காக்க அனுப்பினார். அந்நான்கும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்தமையால் நான்மாடக்கூடல் என்னும் பெயர் ஏற்பட்டதாகப் பரஞ்சோதியார் கூறியுள்ளார். எந்நாட்டவரும் எவ்வூரினரும் வந்துகூடும் வளமான நகர் என்பதால், கூடல் என்னும் பெயர் பெற்றது என்பர். சங்கம் வைத்துச் செந்தமிழை வளர்க்க, புலவர் எல்லாரும் கூடியதால், கூடல் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் அறிஞர் கூறுவர்.

மதுரையை விரிவுபடுத்த எண்ணி, இறைவனிடம் அதன் எல்லையை வரையறுத்துத் தருமாறு வேண்டினான் பாண்டியன். இறைவன், தன் கையணியாகிய பாம்பிடம் எல்லையை வரையறுக்க ஆனையிட்டார். பாம்பு வாலை நீட்டி வலமாகத் தன் உடலை வளைத்தது. அவ்வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையை வகுத்துக் காட்டியது. அன்றுமுதல், மதுரைக்கு ஆலவாய் என்னும் பெயர் அமைந்ததாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. ஆலவாய் என்பது ஆலத்தை(விடத்தை) உடைய பாம்பினைக் குறிக்கும். மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஆலமர நிழலில் வீற்றிருந்ததால் ஆலவாய் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.
தென்மதுரையகத்தே சிறந்து நின்ற முதற்சங்கம் கடற்கோளால் அழிந்துபட, கபாடபுரத்தின்கண் இடைச்சங்கம் அமைந்தது. பின்னர், மற்றுமொரு கடற்கோளால் அந்நகரும் விழுங்கப்பட, கடைச்சங்கம் நிறுவப்பட்ட நிலப்பகுதியே இன்றைய மதுரை என்பர்.  மருத மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்தமையால் மருதை என வழங்கிய இடம் காலப்போக்கில் மதுரை என்றாகியதாம். கல்வெட்டில் மதிரை என்ற பெயர் காணப்படுகிறது. சங்ககால மதுரை, பூம்புனல் ஆறாகிய வையை ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. அம்மதுரையில் யானைமீது போர்வீரன் ஒருவன் உட்கார்ந்து, தன் கையில் மிக உயர்ந்த வெற்றிக்கொடியை ஏந்திச் செல்லும் அளவுக்குக் குன்றைக் குடைந்தாற் போன்ற வாயிலும், பாம்பென நெளிந்து செல்லும் பொறிகளையுடைய பெருமதிலும், அதனைச்சுற்றி ஆழ்ந்து அகன்ற அகழியும் இருந்துள்ளன. யானைக் கூட்டங்கள் அகழிக்குப் போவதற்கு ஏற்ற சுருங்கை(சுரங்க) வழியும் அமைந்திருந்தது. மதுரைநகரின் நடுவில் அண்ணல் கோவிலும் அதனைச் சுற்றி முறையாக ஒழுங்குற அமைந்த தெருக்களும் காண்பதற்குத் தாமரைப் பொகுட்டையும் அடுக்கடுக்கான இதழ்களையும் போன்று காட்சியளித்தன. இஃது அன்றைய தமிழர் நகரமைப்புக் கலையின் நுணுக்கத்தை உலகிற்குப் பறைசாற்றும் அடையாளமாகத் திகழ்கின்றது.

சிவன், திருமால், பலராமன், செவ்வேள், ஐயை, கொற்றவை, சிந்தாதேவி எனக் கடவுளர் பலருக்கும் கோவில்கள் இருந்துள்ளன. அரண்மனை, பல்வேறு தெருக்கள், அறங்கூறு அவையம், அம்பலங்கள், மன்றங்கள், அறக்கூழ்சாலைகள், நாளங்காடி அல்லங்காடி முதலியன மதுரையில் இருந்துள்ளன.


Thursday, 18 January 2018

மணிமேகலை


காப்பியக் கதை


மணிமேகலைக் காப்பியம் தமிழ் மாணவர்களாகிய நீங்கள் அறிந்ததுதான். என்றாலும் அதன் கதைப் போக்கு எவ்வாறு அமைந்துள்ளது? கதை நிகழ்ச்சிகள் எங்கு நிகழ்கின்றன என்பது பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டாமா? அதற்காகவே இங்குக் கதைச் சுருக்கம் தரப்படுகிறது.

3.2.1 மலர்வனத்தில் மணிமேகலை

காப்பியத் தலைவி மணிமேகலை கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள்; கோவலன் கொலையுண்டதை அறிந்த மாதவி தன் அக வாழ்வைத் துறந்து, அறவண அடிகள் என்னும் துறவியிடம் அறங்கேட்டுத் தெளிந்து பௌத்தத் துறவியாகிறாள். தன்மகள் மணிமேகலையையும் துறவி ஆக்குகிறாள். அப்போது புகார் நகரில் இந்திர விழா தொடங்கியது. முறைப்படி மாதவியும் மணிமேகலையும் ஆடல் பாடல்களில் கலந்து கொள்ள வேண்டும். கலை வாழ்க்கையைத் துறந்ததனால் இருவரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால் சினமுற்ற மாதவியின் தாய் சித்திராபதி, வயந்தமாலை என்பவளை அனுப்பி மாதவியை விழாவில் ஆட வருமாறு அழைக்கிறாள். மாதவியோ,

மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்

                      (ஊர் அலர் உரைத்த காதை: 55-57)

என்று கூறி மறுத்து விடுகிறாள்.

மணிமேகலையைக் கற்பரசி கண்ணகியின் மகள் என்றும், அவள் தீய தொழிலில் ஈடுபட மாட்டாள் என்றும் அறிவிக்கிறாள்.

கோவலன் கொலைப்பட்ட துன்ப நிகழ்ச்சியைப் பற்றி மாதவி கூறக் கேட்ட மணிமேகலை கண்ணீர் வடிக்கிறாள். அவள் கண்ணீர்த் துளி புத்த பெருமானுக்காகத் தொடுத்த பூமாலையில் பட்டுப் புனிதம் இழக்கச் செய்கிறது. அதனால் புதிய பூக்கள் பறித்து வந்து மாலை தொடுக்க மணிமேகலையும், அவள் தோழி சுதமதியும் உவவனம் என்னும் பூங்காவுக்குச் செல்கின்றனர்.

● உதயகுமரன் வருகை

அப்போது, மதங்கொண்ட யானையை அடக்கிய சோழ மன்னனின் மகன் உதயகுமரன், மணிமேகலை மலர் வனம் புகுந்ததை அறிந்து அவளைத் தேடி உவவனம் வருகிறான். உதயகுமரன் தன்பால் மிகுந்த வேட்கை கொண்டுள்ளான் என்பதை உணர்ந்த மணிமேகலை, செய்வதறியாது அங்குள்ள பளிக்கறை மண்டபத்தில் ஒளிந்து கொள்கிறாள். அவளைப் பற்றிச் சுதமதியிடம் உதயகுமரன் கேட்க, அவளோ “மணிமேகலை தவ ஒழுக்கம் உடையவள்; சபிக்கும் வன்மையும் காமம் கடந்த வாய்மையும் உடையவள்” என்கிறாள். பளிக்கறைக்குள் மணிமேகலையின் உருவத்தைக் கண்ட உதயகுமரன், உள்ளே செல்ல வழியறியாது தடுமாறுகிறான். மணிமேகலையைச் சித்திராபதியால் அடைவேன் எனச் சினத்துடன் கூறி நீங்குகிறான்.

● மணிபல்லவம் செல்லல்

பளிக்கறை விட்டு வெளிவந்த மணிமேகலை, தன் நெஞ்சம் அவன்பால் செல்வது கண்டு, “அவன் என்னை இகழ்ந்து பேசினான். இருந்தும் என் நெஞ்சம் அவனை நோக்கிச் செல்கிறது. காதலின் இயற்கை இது தானா? அப்படியாயின் அது கெட்டு அழியட்டும்” என்று தோழியிடம் கூறுகிறாள். அப்போது, இந்திரவிழாக் காண வந்த மணிமேகலா தெய்வம் அவர்களை அணுகி, “இது முனிவர் வனமாதலின் உதயகுமரன் தீங்கு செய்யாது சென்றனன்; நீவிர் இருவரும் சக்கரவாளக் கோட்டம் செல்க” என அறிவுறுத்துகிறது. சக்கரவாளக் கோட்டத்தில் சுதமதி சிறிது கண் துயில்கிறாள். மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மயக்கி மணிபல்லவம் எடுத்துச் செல்கிறது. பின் அத்தெய்வம் உதயகுமரனைக் கண்டு “தவத்திறம் பூண்ட மணிமேகலைபால் வைத்த வேட்கை ஒழிக” என அறிவுறுத்துகிறது. தொடர்ந்து மணிமேகலா தெய்வம் சுதமதியிடம் சென்று, “மணிமேகலை மணிபல்லவத்தில் இருக்கிறாள்; அங்குத் தன் பழம் பிறப்பை அறிந்து ஏழு நாட்களில் திரும்பி வருவாள்” என்கிறது. சக்கரவாளக் கோட்டத்திலுள்ள கந்திற்பாவையும், மணிமேகலை ஏழு நாட்களில் “தன் பிறப்பதனோடு நின்பிறப்பும் உணர்ந்து வருவாள்” என்கிறது. அப்போது பொழுது விடிகிறது. சுதமதி மாதவியிடம் வந்து நிகழ்ந்தவற்றைக் கூறி வருந்தி இருக்கிறாள்.

3.2.2 மணிபல்லவத்தில் மணிமேகலை

மணிபல்லவத்தில் தனித்து விடப்பட்ட மணிமேகலை உவவனத்தையோ சுதமதியையோ காணாது புலம்புகிறாள். தன் தந்தை கோவலனை நினைக்கிறாள். பலவாறு புலம்பும் மணிமேகலையின் முன் புத்த பெருமானின் மறுவடிவான தரும பீடிகை காட்சியளிக்கிறது. கண்ணில் நீர் வழிய, கைகள் தலைமேல் குவிய, பீடிகையை மும்முறை வலம் வந்து முறைப்படி தொழுகிறாள். தொழுத அளவில் தன் முந்திய பிறவி பற்றி அறிகிறாள். தான் அசோதர நகர் அரசன் இரவிவர்மனுக்கும் அவன் மனைவி அமுதபதிக்கும் இலக்குமி என்னும் மகளாகப் பிறந்து, அத்திபதி அரசன் மகன் இராகுலனை மணந்ததை அறிகிறாள். இராகுலன் ‘திட்டிவிடம்’ என்னும் பாம்பு தீண்டி இறந்துபடத் தான் தீப்புகுந்து இறந்ததுமாகிய பழம்பிறப்பினை உணர்கிறாள். பின், அங்குத் தரும பீடிகை தொழுது நிற்கும் மணிமேகலா தெய்வத்தின் மூலம் மாதவி, சுதமதி ஆகியோர் தம் முற்பிறப்பு வரலாற்றை அறிகிறாள். முற்பிறப்பில் இராகுலன் ஆக இருந்தவன்தான் உதயகுமரன் என்பதையும் அறிகிறாள். மணிமேகலா தெய்வம், மணிமேகலைக்கு இனி எதிர்காலத்தில் நிகழ விருப்பதைக் கூறுகிறது. வேற்று உ

திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு


                              திருமுருகாற்றுப்படை 







        பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார். இவரது இயற்பெயர் கீரன் என்பதாம். நெடுநல்வாடையை இயற்றியவரும் இவரே. இந்நூல் ஆற்றுப்படுத்தப்படுவர்கள் பெயரைச் சார்ந்து வழங்காமல் பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார்ந்து விளங்குகிறது. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் செந்தமிழ் தெய்வமாகிய முருகப் பெருமான். இந் நூல் முருகன் எழுந்தருளியுள்ள ஆறு படை வீடுகளை பாராட்டும் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

Wednesday, 10 January 2018

தமிழகத்தைத் தாக்கிய புயல்கள்


        தமிழகத்தை இதுவரை தாக்கிய 29 புயல்கள்



சென்னை: வங்கக் கடலில் உருவான 29 புயல்களில் தானே, நிஷா, வர்தா புயல்கள் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியவை.  இதுவரை தமிழகத்தில் 29 புயல்கள் தாக்கியுள்ளன. அதில் கடந்த 1966ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி வங்கக் கடலில் தோன்றிய புயல் 100 கிமீ வேகத்தில் சென்னை அருகே கரையைக் கடந்தது. அதில் பெருத்த சேதம் ஏற்பட்டது. ராயபுரம் பனைமரத் தொட்டி குப்பத்தில் கடல் நீர் உள்ளே புகுந்தது. கூவம்  ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சென்ைன துறைமுகத்துக்கு வந்த 4 கப்பல்கள் புயலில் சிக்கி தரைதட்டி நின்றன. 2 கப்பல்கள் பாறைமீது மோதி நொறுங்கின. சென்னை துறைமுகத்தில் நின்றிருந்த லைபீரியாவை சேர்ந்த கப்பல் ஒன்று புயல் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அங்கும் இங்கும் தத்தளித்து ஒரு பாறைமீது மோதி  இரண்டாக பிளந்து கடலில் மூழ்கியது. அந்த கப்பலின் கொடி மரம் மட்டும் கடல் மட்டத்துக்கு வெளியில் தெரிந்தது.

அந்த கப்பலில் பணியாற்றிய 47 பேரில் கேப்டன் உள்பட 14 பேர் கப்பல் உடைந்ததால் கடலில் குதித்து நீந்தி கரை சேர்ந்தனர். 8 பேர் கப்பலின் கொடி மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தனர். மறுநாள் காலையில் அவர்கள் மீட்கப்பட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வந்து கொண்டு இருந்த பயணிகள் ரயில் மதுராந்தகம் அருகே கவிந்தது. அதில் பலபேர் காயம் அடைந்தனர். 1977ம் ஆண்டு ஒரு பெரும் புயல் தமிழகத்தை தாக்கியது. திருச்சி தஞ்சையில் மட்டும் அதிக அளவில் சேதம் ஏற்பட்டது. சென்னை துறைமுகத்தில் நின்றிருந்த சீன கப்பல் ஒன்று கடலில் மூழ்கியது. அந்த கப்பலின் கேப்டன் இறந்தார். 1985ம் ஆண்டில் ஒரு புயல் தமிழகத்தை தாக்கியது. பின்னர் 1990 முதல் 2006ம் ஆண்டு வரை உருவான புயல்களில் 1998ல் உருவான புயல் அதிக அளவில் மழையை கொட்டித் தீர்த்து. அந்த ஆண்டு கணக்குப்படி சராசரியை விட 30 சதவீதம்  கூடுதலாக மழை பெய்தது.

அதற்கு பிறகு, 2005ம் ஆண்டு பியார், பாஸ், பனூஸ் என மூன்று புயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. இதன் காரணமாக 2005ம் ஆண்டு மொத்தமாக 773 மிமீ மழை பெய்தது. சராசரியாக 432 மிமீ என கணக்கிடப்பட்டது. இது 79 சதவீதம் இயல்பைவிட கூடுதல். அதனால் 2005ம் ஆண்டு பெருஞ்சேதம் ஏற்பட்டது. தமிழகமே வெள்ளக்காடானது. பல கோடி மதிப்பு பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. 2008ம் ஆண்டு வந்த நிஷா புயல் வங்கக் கடலில் உருவானது. 22 ஆண்டுகளுக்கு பிறகு வங்கக் கடலில் உருவான பெரும் புயல் என்று இதை வர்ணித்தார்கள். நவம்பர் மாதம் தோன்றிய இந்த புயல் சுமார் 20 நாட்கள் தமிழகத்தில் மழையை கொட்டித்  தீர்த்து காரைக்காலில் கரை கடந்தது. இதனால் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 177 பேர் இறந்தனர். 2782 கால்நடைகள் இறந்தன. 61 ஆயிரம் குடிசைகள் வெள்ளத்தில் மூழ்கின. 1.5 லட்சம் குடிசைகள் வீடுகள் சேதம் அடைந்தன. சுமார் 8.80 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 14 லட்சம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

20 லட்சம் ஏக்கர் பயிர் சேதம் அடைந்ததாக அரசு அறிவித்தது. 2011ம் ஆண்டு தானே புயல் வங்கக் கடலில் உருவாகி தமிழகத்தை தாக்கியது. அந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி உருவான இந்த புயல்தான் முதலாவது அதிதீவிரப் புயல் என்ற பட்டியலில் இடம் பிடித்தது. இது  டிசம்பர் 30ம் தேதிதான் புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடையே கரையைக் கடந்தது. மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று வீசி கடலோரப் பகுதிகளை சி்ன்னாபின்னமாக்கியது. அப்போது சென்னையில் 2, புதுச்சேரியில் 7, கடலூரில் 39 பேர் உயிரிழந்தனர்.1000க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்படைந்தன.40 ஆயிரம் மின் கம்பங்கள் முறிந்து விழந்தன. தானே புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம் தான்.2015ம் ஆண்டு பருவமழையின் போது செபலா, மெஹ் என்று இரண்டு புயல்கள் அரபிக் கடல் பகுதியில் தோன்றினாலும் வங்கக் கடலில் பெரிய அளவில் புயல் ஏதும் உருவாகவில்லை.

ஆனால், எல்நினோ என்ற புவியியல் மாற்றம் காரணமாக  வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி அதன் காரணமாக உருவான காற்றழுத்தம் ஆகியவை வங்கக் கடலில் உருவாகி நவம்பர் முதல் வாரத்தில் கனமழையை கொட்டித் தீர்த்தது. அதனால் கடலோர மாவட்டங்கள் எல்லாம் மழை வெள்ளத்தில் தத்தளித்தன. அதிலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. 2015 டிசம்பர் முதல் வாரத்திலும் மீண்டும் கனமழை கொட்டத் தொடங்கியது. ஏற்கெனவே பெய்த மழையால் வெள்ளம் சூழ்ந்த நிலையில், மீண்டும் மழை பெய்தது பெரும் சோதனையாக அமைந்தது. மக்கள் வெளியில் வர அச்சப்பட்டு வீட்டுக்குள் முடங்கினர். டிசம்பர் 2ம் தேதி இரவு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. வெள்ள நீருடன் அந்த நீரும் சேர்ந்து சென்னையை மூழ்கடித்தத

ஒக்கி புயல்


 

ஒக்கி புயல் 


புதுதில்லி: கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள புயலுக்கு ‘ஒக்கி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை வங்காளதேசம் வழங்கியுள்ளது. வங்காள மொழியில் ‘ஒக்கி’ என்றால் கண் என்று அர்த்தமாம்.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை தீவிரமாகி கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதியில் ஒக்கி புயலாக மையம் கொண்டிருந்ததை அடுத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளத்தின் ஒரு பகுதியிலும் பலத்த சூறாவளியுடன் பெய்த கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கிப்போனது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் 4 பேரும், கேரளத்தில் 4 பேரும் ஆக மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அடுத்த புயலுக்கான பெயரை இந்தியா வழங்கியுள்ளது. உலக வானிலை ஆய்வு அமைப்பும் மேலும் 2 அமைப்புகளும் இணைந்து 2000-ஆம் ஆண்டில் புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறையை கொண்டுவந்தன. இதன்மூலம் உலகளவில் வானிலை முன்னறிவிப்பாளர்கள், பொதுமக்கள், வானிலை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு தொடர்புகொள்ள வசதியாகவும், எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடுவதற்கு உதவியாகவும் இந்த முறை கொண்டுவரப்பட்டது. உலகளவில் 9 கடல் மண்டலங்களில் உள்ள நாடுகள் இந்த பெயர்களை வழங்குகின்றன.

இப்போது கன்னியாகுமரி அருகே உருவாகி தாக்கியுள்ள புயலுக்கு ‘ஒக்கி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது வங்கதேசம் தந்த பெயராகும். வங்காள மொழியில் 'ஒக்கி' என்றால் கண் என்று அர்த்தமாம்.

அடுத்த புயலுக்கு ‘சாகர்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது இந்தியா தந்த பெயராகும். ஹிந்தி வார்த்தையான 'சாகர்' என்றால் கடல் என்று அர்த்தம் என தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரியை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஒக்கி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று லட்சத்தீவுகளை நோக்கி நகர்ந்து இருப்பதாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மையத்தால் உருவான இந்தப் புயல் லட்சத்தீவில் மையம் கொண்ட பின் கடலிலே வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் கடல் சூழல் சாதகமாக இருந்தால், வட கிழக்காக கோவா, மும்பை கடற்கரை நோக்கி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகரும் என்று அமெரிக்காவின் சர்வதேச புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தைத் தொடர்ந்து கேரளாவிலும் ஒக்கி புயலால் பலத்த மழை பெய்து வருகிறது. கேரளாவில் திருவனந்தபுரம், ஆலப்புழை, கோட்டயம், பத்தனந்திட்டா, இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

புயல் பெயர் காரணம்

 


வர்தா புயல் என்று பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா?



  • தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ள வர்தா புயல் இந்தியாவில் தென் ஆந்திரா மற்றும் வட தமிழக பகுதிகளில் நாளை மதியம் கரையை கடக்க உள்ளது.



  • வர்தா புயலானது தற்போது சென்னையில் இருந்து 260 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • சென்னையை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த புயலுக்கு வர்தா என்ற பெயரினை பாகிஸ்தான் வைத்துள்ளது, வர்தா என்றால் சிகப்பு ரோஜா என்று அர்த்தம்.

  • இந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் பெயரினை தீர்மானம் செய்கின்றன.



  • கடைசியாக சென்னையை தாக்கிய நாடா புயலுக்கு ஓமன் நாடு தான் பெயர் வைத்தது குறிப்பிடத்தக்கது, நாடா என்றால் ஒன்றும் இல்லை என்பது பொருள்.

சிவன் பிள்ளை



 விண்வெளித்துறை செயலாளர் மற்றும் இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமனம்

பதிவு: ஜனவரி 10, 2018 19:48
     









மத்திய விண்வெளித்துறை செயலாளர் மற்றும் விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி:

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக கிரண் குமார் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக உள்ள சிவன் பிள்ளை நியமனத்திற்கு கேபினட் நியமன கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த சிவன் பிள்ளை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல், இந்திய அறிவியல் நிறுவனத்தில் முதுகலை பொறியியல் முடித்துள்ளார். மேலும், மும்பை ஐ.ஐ.டி.யில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 1982-ம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்த சிவன் பல்வேறு திட்டங்களில் திறம்பட பணியாற்றியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக சிவன் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பொறுப்பேற்றார். இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிவன், விண்வெளித்துறை செயலாளர் பதவியையும் சேர்த்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடக இலக்கியம்


                              நாடக இலக்கியம்

நாடு + அகம் = நாடகம்; உள்ளம் விரும்புமாறு ஆடலும் பாடலும் கொண்டு விளங்குவது நாடகம் ஆகும். ‘இல்லது, இனியது, நல்லது என்று புலவரால் நாட்டப்படுவது நாடகம்’ என்பார் தொல்காப்பிய உரையாசிரியர். கூத்தரும் விறலியரும் நாடகக் கலைஞர்கள் ஆவர்.

1.2.1 காலந்தோறும் நாடகம்


தொல்காப்பியத்தில் நாடக வழக்கு என்னும் சொல்லாட்சி காணப் பெறுகின்றது. பரதம், அகத்தியம், முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல், பஞ்சமரபு, பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ் போன்ற நாடக இலக்கண நூல்கள் பண்டைக் காலத்தில் இருந்தமையைச் சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையின்வழி அறியலாம். கலித்தொகை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் நாடகக் கூறுகளை நன்றாகக் காணமுடிகின்றது.

கலைகள் காமத்தை மிகுவிப்பன என்ற எண்ணமுடைய சமணர்களால் களப்பிரர் காலத்தில் நாடகம் தன் செல்வாக்கை இழந்தது. இராஜராஜசோழன் காலத்தில் ராஜராஜேஸ்வர விஜயம் என்னும் நாடகம் இயற்றப்பட்டு நடிக்கப் பெற்றது. பிறகு கி.பி.17ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து மீண்டும் நாடகங்கள் புத்துயிர் பெறத் தொடங்கின. பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் முதலியன எளிய நடையில் அமைந்து மக்களை மிகவும் கவர்ந்தன.

கி.பி.18ஆம் நூற்றாண்டளவில், இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை போன்ற நாடகங்கள் மிகப் புகழ் பெற்றன.

கி.பி.19ஆம் நூற்றாண்டு தொடங்கி, நாடகம் மிகுந்த வளர்ச்சிபெறத் தொடங்கியது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, ஆங்கில மொழியின் இரகசிய வழி (The secret way) என்னும் நூலைத் தழுவி, மனோன்மணீயம் என்னும் நாடகத்தை யாத்தளித்தார். இதனைப் போன்று அடுத்தடுத்துக் கவிதை நாடகங்கள் பல தமிழில் எழுந்தன. பிறகு, உரைநடை உரையாடல்கள் கொண்ட நாடகங்கள் பலவும் தோன்றலாயின. பிற்காலத்திய திரைப்படத் தோற்றத்திற்கு நாடகமே முன்னோடி என்பது யாவரும் அறிந்த ஒன்றேயாகும். இன்றும், தொலைக்காட்சிகளில் நாடகத்தின் செல்வாக்குச் சிறந்து விளங்கி வருவது கண்கூடு.

காசி விசுவநாத முதலியார், திண்டிவனம் ராமசாமி ராஜா, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பரிதிமாற் கலைஞர், பம்மல் சம்பந்த முதலியார், நவாப் ராஜமாணிக்கம், எம்.ஆர்.ராதா, ஆர்.எஸ்.மனோகர் ஆகியோர் நாடகத் துறையில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

1.2.2 நாடக அமைப்பு


நாடகத்தில் உரையாடல் முதலிடம் பெறும். பங்கு பெறுவோர் கதாபாத்திரங்கள் எனப் பெறுவர். நிகழ்ச்சி நடைபெறும் இடம், காலம், சூழல் ஆகியனவும் குறிக்கப் பெற வேண்டும். பேசுவோருக்கேற்ற உணர்ச்சிக் குறிப்புகள் (மெய்ப்பாடு) வசனத்தில் ஆங்காங்கே அடைப்புக் குறிக்குள் சுட்டப் பெறுவதும் உண்டு.

நாடகம், பொதுவாக, தொடக்கம், வளர்ச்சி, உச்சம், வீழ்ச்சி, முடிவு என்று ஐந்து கூறுகளையுடையதாக இருக்கும். இக்கூறுகளாகிய பெரும்பிரிவுகள் அங்கங்கள் என்னும் பெயரில் விளங்கும். இவற்றில் களன் அல்லது காட்சி என்னும் சிறு பிரிவுகள் அமையும்.

இன்பியலாகவோ, துன்பியலாகவோ நாடகங்கள் முடிவு பெறும். துன்பியல் முடிவுகளே பெரும்பாலும் வரவேற்புப் பெறும். நாடகம் இத்தனை பக்கங்கள் அல்லது இவ்வளவு கால நேரம் கொண்டதாக விளங்க வேண்டும் என்றெல்லாம் எந்த வரையறையும் இல்லை. படிக்கத்தக்கன, நடிக்கத்தக்கன, படிக்கவும் நடிக்கவும் தக்கன எனப் பல வகைகளில் நாடகம் புனையப் பெறும். நாடகம் நடிக்கப் பெறுங்காலத்து நடிப்பவரின் மெய்ப்பாடு, குரல் அழுத்த வேறுபாடு முதலியன வசனத்திற்கு மேலும் மெருகூட்டிக் காண்போரை விரைந்து சென்றடைகின்றன எனலாம். மேடை நாடகம், வானொலி நாடகம், தொலைக்காட்சி நாடகம், படிப்பறை நாடகம் எனப் பலவாகக் கலைஞரின் நிலைக்கேற்ப நாடகங்கள் புத்தம் புதியனவாகப் படைத்தளிக்கப் பெற்று வருகின்றன.

பாவைக்கூத்து

 

        பாவைக்கூத்து   




                                                              ஊடகத்தை ஓடவிடு
                                                             பாவைக்கூத்து, கொல்லம்

 
             உயிரற்ற பாவைகளை, உயிருள்ள பாத்திரங்களைப் போல் இயக்கி நிகழ்த்தப்படும் கூத்து பாவைக்கூத்து என்றழைக்கப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட ஆட்டுத் தோலில் வரையப்பட்ட வண்ணப்படங்களை விளக்கின் ஒளி மூலம் திரைச்சீலையில் அதன் நிழல் தெரியுமாறு ஆட்டி நிகழ்த்துவது தோல்பாவை கூத்து.இக்கலை, தோல்பாவைக் கூத்து, தோல்பாவை நிழல் கூத்து, நிழலாட்டம், தோல் பொம்மலாட்டம் என வெவ்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.[1] இக்கலையானது இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகம், கேரளம், ஒரிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நிகழ்த்தப்படுகிறது. தமிழகத்தில் மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நிகழ்கிறது. இக்கலையானது இன்றைய நிலையில் நலிந்து கொண்டே வருகின்ற கலையாக மாறிவருகிறது.மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்ட ‘கணிகர்’ சாதியின் உட்பிரிவான ‘மண்டிகர்’ சாதியைச் சார்ந்தவர்கள், இக்கலையை நிகழ்த்துகின்றனர்.

நாடகச் சிறப்பு


               அரங்கேற்று காதை


****************************************



1.மாதவி நாட்டியம் பயின்றால்

(மாதவியின் பிறப்பு,சிறப்பு,நடன பயிற்சி பற்றி விவரித்தல்.)






தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்பு-அருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய 5

பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாதுஅவிழ் புரிகுழல் மாதவி-தன்னை-
ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்
கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்,
ஏழாண்டு இயற்றி,ஓர் ஈராறு ஆண்டில் 10
சூழ்கடன் மன்னற்குக் காட்டல் வேண்டி,

தெய்வ மலையான பொதிகை மலையில் இருந்த அகத்திய முனிவர் சாபமேற்று,விண்ணுலகை விடுத்து மண்ணுலகில் பிறந்தனர்,இந்திரன் மகன் சயந்தனும்,ஊர்வசியும்.மாதவியாக மண்ணுலகில் பிறந்த ஊர்வசி,தன் நடனத் திறமையை அரங்கேற்றி,’தலைக்கோல்’ பட்டம் பெற்றால்.வேணுவாக பிறந்த சயந்தனும் அவளுக்கு துணை நின்றான்.அந்த நடன அரங்கிலே அகத்தியர்,அவர்களுக்குச் சாபம் நீங்க செய்தார்.

நாடகத் தொழிலில் மாறுபாடுகள் இல்லாத சிறப்பினை உடையவர்,மாதவியாக பிறந்த ஊர்வசி போன்ற வானமகளிராகிய நடன மாதர்.அவர்ப் போல குன்றாத தொழில் சிறப்போடு் பிறந்தவள் இந்த ‘மாதவி’!

சித்திராபதியின் மகளாக பிறந்த இவள்,அழகிய பெரிய தோள்களை உடையவள்;அந்த மாதவியான ஊர்வசின் மரபினிலே வந்து பிறந்தவள்;தாது அவிழ்கின்ற மலர்கள் சூடிய,சுருள் கூந்தல் உடையவள்.

‘கூத்து’,'பாட்டு’,'ஒப்பனை’ என்று நாடக மகளிர்க்கு உரிமையாக சொல்லப்படும் மூன்றினுள் ஒன்றினும் குறைவில்லாமல் ஏழாண்டுக்காலம் மாதவி இவற்றில் முறையாக பயிற்சி பெற்றால்.தாம் பயின்ற நடன கலையை அரங்கேற்ற நினைத்து,தம் பன்னிரண்டாவது வயதில்,வீரர் படை சூழ்ந்த,கழலணிந்த சோழமன்னன் அவைக்கு செல்ல விரும்பினால்.

Tuesday, 9 January 2018

சிலப்பதிகாரம்


                                  சிலப்பதிகாரம்








            சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு  காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.

பிள்ளைத்தமிழ்









 காப்புப் பருவம்

பாட்டுடைத் தலைவனை    அல்லது தலைவியைக் காத்தருளுமாறு இறைவனை    வேண்டிப்பாடுவது. இது குழந்தையின் மூன்றாம் மாதத்திற்குரியது.

தாலப் பருவம்

 தால் - நாக்கு, குழந்தையின் ஐந்தாம் மாதத்திற்குரியது. குழந்தையை நாவசைத்து ஒலி எழுப்புமாறு வேண்டுதல்.

 செங்கீரைப் பருவம்

ஒரு காலை மடித்து ஒரு காலை நீட்டி இரு கைகளையும் ஊன்றிக் கீரை அசைவது போலக் குழந்தையை, செங்கீரை ஆடுமாறு வேண்டுவது. இது   குழந்தையின் 7ஆம் மாத்திற்குரியது.

சப்பாணி

குழந்தையின் 9ஆம் மாதத்திற்குரியது. இது குழந்தையை இரு கைகளையும் கொட்டுமாறு வேண்டுதல்.

முத்தம்

இப்பருவம் 11ஆம் மாதத்திற்குரியது. குழந்தையை முத்தம் கொடுக்கும்படியாகத் தாயும் பிறரும் வேண்டுவது.

வருகை அல்லது வாரானை

குழந்தையின் 13ஆம் மாதத்தில் குழந்தையைத் தளர்நடையிட்டு வருக என அழைப்பது.

அம்புலி

15ஆம் மாதத்திற்குரிய இப்பருவத்தில்    நிலவைப் பாட்டுடைத் தலைவனுடன் விளையாட வரும்படி அழைப்பது. இப்பருவத்தைச் சாம, பேத, தான, தண்டம் என்னும் நான்கு வழிகளில் அமைத்துப் பாடுவர். இப்பருவம் பாடுவதற்குக் கடினமான பருவம் என்பர்.

சிற்றில்

17ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண் குழந்தைகள் கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும். (சிற்றில் = சிறு வீடு)

சிறுபறை

19ஆம் மாதத்திற்குரிய இப்பருவம் குழந்தை சிறுபறை முழக்கி விளையாடுதலைக் குறிக்கும்.

சிறுதேர்

21ஆம் மாதத்திற்குரிய இதில் குழந்தை சிறுதேர் உருட்டி விளையாடுதல் குறிப்பிடப்படும்.

நீராடல்

குழந்தையை நீரில் குளிக்கும்படி வேண்டுதல்.

அம்மானை - கழங்கு

கழங்கினை மேலை வீசி ஆடும்படி வேண்டுதல்.

ஊசல்

ஊஞ்சலில் ஆடும்படி குழந்தையை வேண்டுதல்.

நற்றிணை




  •                       நற்றிணை

இது ஒரு அகநூல். 400 பாடல்கள் கொண்டது. நற்றிணையை தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
நற்றிணை நூலைத் தொகுப்பித்த அரசன் பாண்டியன் மாறன் வழுதி.
தொண்டி என்பது சேர நாட்டு துறைமுகம். மாந்தை என்பது சேர நாட்டு கடற்கரை ஊர் என்பது போன்ற செய்திகள் நற்றிணையிலிருந்து அறியப்படுகின்றன.

பத்துப்பாட்டு நூல்கள்


பத்துப்பாட்டு நூல்கள் - Names of Pathupattu Noolgal
பத்துப்பாட்டு நூல்கள்
1. திருமுருகு ஆற்றுப்படை
2. பொருநர் ஆற்றுப்படை
3. சிறுபாண் ஆற்றுப்படை
4. பெரும்பாண் ஆற்றுப்படை
5. முல்லைப்பாட்டு
6. மதுரைக் காஞ்சி
7. நெடுநல்வாடை
8. குறிஞ்சிப் பாட்டு
9. பட்டினப்பாலை
10. மலைபடுகடாம்

பத்துப்பாட்டு நூல்கள்


பத்துப்பாட்டு நூல்கள் - Names of Pathupattu Noolgal
பத்துப்பாட்டு நூல்கள்
1. திருமுருகு ஆற்றுப்படை
2. பொருநர் ஆற்றுப்படை
3. சிறுபாண் ஆற்றுப்படை
4. பெரும்பாண் ஆற்றுப்படை
5. முல்லைப்பாட்டு
6. மதுரைக் காஞ்சி
7. நெடுநல்வாடை
8. குறிஞ்சிப் பாட்டு
9. பட்டினப்பாலை
10. மலைபடுகடாம்

திரு.வி.க. நூல்கள்







திரு.வி.க. நூல்கள்








தமிழ் விடுதூது

திருச்சிற்றம்பலம்

மதுரைச் சொக்கநாதர்

தமிழ் விடுதூது


(கலிவெண்பா)

1.சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந்
தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண்
 
2.டிசையுந் தமிழரசென் றேத்தெடுப்பத் திக்கு
விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே
 
3.செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு
கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற்
 
4.கூடல் புரந்தொருகாற் கூடற் புலவரெதிர்
பாடலறி வித்த படைவேளும் - வீடகலா
 
5.மன்னுமூ வாண்டில் வடகலையுந் தென்கலையும்
அன்னைமுலைப் பாலி னறிந்தோறும் - முன்னரே
 
6.மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்
ஈன்றுதரச் சொல்லி னிசைத்தோருந் - தோன்றயன்மால்
 
7.தேடிமுடி யாவடியைத் தேடாதே நல்லூரிற்
பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி
 
8.மட்டோலைப் பூவனையார் வார்ந்தோலை சேர்த்தெழுதிப்
பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும் - முட்டாதே
 
9.ஒல்காப் பெருந்தமிழ்மூன் றோதியருண் மாமுனியும்
தொல்காப் பியமொழிந்த தொன்மொழியும் - மல்காச்சொற்